தமிழ்நாடு

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கூடங்களையும் ஜூன் 3ல் திறக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு 

DIN

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளி கூடங்களையும் முன்பு அறிவித்தபடி ஜூன் 3ல் திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை கால விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 3-ஆம் தேதி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் அதிகரித்துவரும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி கூடங்களையும் முன்பு அறிவித்தபடி ஜூன் 3ல் திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக  பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கோரியதாவது:

மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கி, கற்பித்தல் பணியை துவங்க வேண்டியுள்ளது.  இதனால் அனைத்து வகை பள்ளிகளையும் திட்டமிட்டபடி ஜூன் 3ல் திறக்க வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இதையே வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT