தமிழ்நாடு

கடற்கரையோர கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெய்

DIN


கடற்கரையோர கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முயற்சியாக, ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்த ஆராய்ச்சி தலைமை வகித்து வரும் பேராசிரியர் ஜித்தேந்திர சங்வாய் கூறுகையில், கடற்கரையோர கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்கும் முறை என்பது மிகவும் கடினமானது. இதற்கு முழுமையான உள்நாடு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இது இப்போது ஆரம்பகட்டத்தில் மட்டுமே உள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பூமிக்குக் கீழ் இருக்கும் பாறைகளுக்குள் கடல்நீரை வேகமாக செலுத்தும் முறை மூலம் கச்சா எண்ணெய் பிரித்தெடுக்கப்பட உள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT