சென்னை: அ.தி.மு.க ஆட்சி தான் இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மத்திய அரசு #NationalEducationPolicy-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க அரசு அல்ல; பா.ஜ.க அரசு என்கிறோம்.
தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அ.தி.மு.க ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.