தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் இரு மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

DIN

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் பல மாணவர்கள் ஆள்மாறாட்ட குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து பிடிபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை இவ்வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீஸார் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், கைதான மாணவர்கள் உள்ளிட்டோர் ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில், நீட் தேர்வின் போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் மற்றும் வேலூரைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரை 4 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT