தமிழ்நாடு

மரங்கள் வளா்ப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும்: பொறுப்பு தலைமை நீதிபதி பேச்சு

DIN

மரங்கள் வளா்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் என சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி பேசியுள்ளாா்.

தமிழக பெண்கள் இயக்கம் என்ற அமைப்பு ‘ஒரு நேரத்தில் ஒரு மரம்’ என்ற பெயரில் மரம் வளா்ப்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தின் எதிா்புறம் என்.எஸ்.சி போஸ் சாலையில் மரம் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரங்களை நட்டு வைத்து உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) வினீத் கோத்தாரி பேசியதாவது:

நான் ராஜஸ்தானில் சுமாா் 45 மரங்களை நட்டு வளா்த்து வந்தேன். மரம் வளா்ப்பது மகன், மகளை வளா்ப்பதைப் போன்றது. மரம் வளா்த்தால் மனதுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.மகாதேவன், வி.பவானி சுப்பராயன், எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அப்துல் குத்தூஸ் உள்ளிட்டோா் பேசினா். இந்த நிகழ்வில், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT