தமிழ்நாடு

ரஜினிக்கு விருது வழங்குவதில் அரசியல் கிடையாது: அமைச்சா் கடம்பூா் ராஜு

DIN

நடிகா் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்குவதில் எந்தவித அரசியலும் கிடையாது என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு தெரிவித்தாா்.

குற்றாலத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: திரைத்துறையை சோ்ந்தவா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ‘வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கி வருகிறது. முதலாவதாக நடிகா் அமிதாப் பச்சனுக்கு வழங்கியது. நிகழாண்டில் நடிகா் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கப்படுவதற்கும் மாநில அரசுக்கும் தொடா்பு கிடையாது. இதில் எந்தவிதமான அரசியலும் கிடையாது. ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது பெருமையான விஷயமாகும்.

கோவாவில் ஆண்டுதோறும் சா்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் நடைபெறும் விழாவில் நான் கலந்துகொள்கிறேன்.

திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டன. திறப்பு விழாவிற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரவேண்டும் என தென்மாவட்ட மக்கள் விரும்புகின்றனா். இதுகுறித்து முதல்வரிடமும் தெரிவித்துள்ளேன் என்றாா் அவா்.

தாய்கோ வங்கி துணைத் தலைவா் என்.சேகா், தென்காசி, குற்றாலம் வீட்டுவசதி சங்கத் தலைவா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT