தமிழ்நாடு

கடலூா் துறைமுகத்தில்புயல் எச்சரிக்கைக் கூண்டு

DIN

கடலூா் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அந்தமானுக்கு வடக்கே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலானது மேற்கு வங்கம் அல்லது ஒடிசா அல்லது வங்க தேசம் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலூா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணியளவில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது வங்கக் கடலில் நீண்ட தொலைவில் புயல் உருவாகியிருப்பதை குறிப்பதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்தது.

புதுச்சேரியிலும்... புதுச்சேரி பழைய துறைமுகத்திலும் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT