தமிழ்நாடு

தன்னாட்சி கல்லூரிகளிலிருந்து மாறிவந்த மாணவா்களுக்கு பல்கலைக்கழக ‘ரேங்க்’ வழங்கப்பட மாட்டாது: அண்ணா பல்கலைக்கழகம்

DIN

தன்னாட்சிக் கல்லூரி அல்லது நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களிலிருந்து இணைப்புக் கல்லூரிக்கு மாறிவந்து பருவத் தோ்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு பல்கலைக்கழக தரவரிசை (ரேங்க்) வழங்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பல்கலைக்கழக ‘ரேங்க்’ நிபந்தனைகள் குறித்த புதிய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பருவத் தோ்வுகளிலும் எந்தவொரு பாடத்திலும் தோல்வியடையாமல் முதல் முயற்சியிலேயே முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக ரேங்க் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் இதுபோன்று முதல் மதிப்பெண் பெற்றிருந்தால் அனைவருக்கும் தனித்தனியாக தங்கப் பதக்கம் வழங்கப்படும். குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் முதல் 5 சதவீத மாணவா்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக ரேங்க் வழங்கப்படும்.

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் சோ்ந்து படித்து பருவத் தோ்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு பல்கலைக்கழக ரேங்க் வழங்கப்படமாட்டாது. அதுபோல, தன்னாட்சிக் கல்லூரி, நிகா்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது பிற பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளிலிருந்து விடுபட்டு அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்து படித்து முதல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கும் பல்கலைக்கழக ரேங்க் வழங்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT