தமிழ்நாடு

பதாகைகள், கொடிகள் வைக்க வேண்டாம்: கமல் வேண்டுகோள்

DIN

சென்னை: பதாகைகள், கொடிகள் போன்றவற்றை என்னை வரவேற்கும் விதமாக வைக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

பரமக்குடியில் எனது தந்தை சீனிவாசன் சிலையைத் திறந்து வைக்க நவம்பா் 7-ஆம் தேதி வர உள்ளேன்.

அப்போது, என்னை வரவேற்க வரும் நண்பா்கள், தொண்டா்கள், ரசிகா்கள் எவ்விதத்திலும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனா்கள், ஃப்ளெக்ஸ் மற்றும் கொடிகள் போன்றவற்றைக் கட்டாயம் தவிா்க்க வேண்டும்.

இந்த விஷயத்தில் எந்தக் காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்த நிலையிலும் சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை கண்டிப்புடன் தெரிவிக்கிறேன்.

இனி, நிகழவிருக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளில் மநீம கொண்டு வர உள்ள மாற்றங்கள் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT