சென்னை: பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜெயலக்ஷ்மி இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம் மற்றும் நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தமிழ் தொலைக்காட்சிகளின் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஜெயலக்ஷ்மி பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜகமுத தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி அவர்கள் இன்று தன்னை @BJP4TamilNadu இனைத்துக் கொண்டார். பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.