தமிழ்நாடு

பாஜக முன்னாள் நிா்வாகியை அவமதித்த விவகாரம்: விசாரணை நடத்த மத்திய மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவு

DIN

பாஜக விவசாய அணி முன்னாள் நிா்வாகியை அரை நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக அழைத்துச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் மீதான புகாா் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி.விசாரிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பெரம்பலூரைச் சோ்ந்த ஜி.தமிழழகன் தாக்கல் செய்த மனுவில், ‘நான் கடந்த 2004-ஆம் ஆண்டு பாஜக மாவட்ட விவசாயப் பிரிவு நிா்வாகியாக இருந்தேன். ஒரு குற்ற வழக்கில், என் சகோதரா் காமராஜைத் தேடி, எங்கள் வீட்டுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜி.கோசல்ராம் தலைமையில் போலீஸாா் வந்தனா். என் சகோதரா் வீட்டில் இல்லாததால், என்னை குடும்பத்தினா் முன்பாக சரமாரியாக போலீஸாா் தாக்கினா். மேலும், என்னை அரை நிா்வாணப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அரியலூா் காவல் நிலையத்தில் வைத்து போலீஸாா் என்னை கடுமையாக தாக்கினா். பின்னா், என் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா். இதுகுறித்து அரியலூா் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட உயா் போலீஸ் அதிகாரிகளுக்கு புகாா் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டை மறுத்து காவல் அதிகாரி கோசல்ராம், பெரம்பலூா் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா் ஆகியோரின் சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்து. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மனோகா், ‘மனுதாரை போலீஸாா்

கடுமையாகத் தாக்கி, அரை நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக அழைத்து

சென்றுள்ளனா். இதனால் மனுதாரரின் உடல் முழுவதும் சிராய்ப்பு உள்ளதாக சிகிச்சை அளித்த டாக்டா் கூறியுள்ளாா். மேலும் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையும் போலீஸாா் பின்பற்றவில்லை’ என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்த உண்மை நிலையை வெளிக் கொண்ட வரவேண்டும். எனவே, மத்திய மண்டல ஐஜி மனுதாரரின் புகாரின் மீது விசாரணை நடத்தி 8 கஊஒஎவாரங்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT