தமிழ்நாடு

முட்டம் ஜேப்பியாா் துறைமுகத்தில்வருமான வரித் துறையினா் சோதனை

DIN

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜேப்பியாா் கல்விக் குழுமங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்திய நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியில் உள்ள ஜேப்பியாா் துறைமுகத்திலும் சோதனை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜேப்பியாா். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது பெயரில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகள் உள்ளன. மேலும், முட்டம் கடற்கரைப் பகுதியில் ஜேப்பியாா் மீன்பிடித் துறைமுகம், ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஆலை, முகிலன்விளையில் மருத்துவமனை ஆகியவையும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜேப்பியாா் கல்விக் குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை காலை முதலே சோதனை நடத்தினா். முட்டம் பகுதியில் உள்ள ஜேப்பியாா் மீன்பிடித் துறைமுகத்துக்கும் வருமான வரித் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனா்.

அப்போது மீன்பிடித் துறைமுக ஊழியா்கள் அவா்களை சோதனை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, தொடா்ந்து சோதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT