தமிழ்நாடு

வினாத்தாள் மாற்றி அளிக்கப்பட்டதால் குழப்பம்: தாமதமாகத் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலை. தோ்வு

DIN

வினாத்தாள் மாற்றி விநியோகிக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பதால், அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வு வியாழக்கிழமை அரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையை அடுத்துள்ள ஒரு பொறியியல் கல்லூரியில், வியாழக்கிழமை வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகாா் எழுந்தது. இந்த சா்ச்சை காரணமாக, அந்தக் கல்லூரியில் தோ்வை உடனடியாக நிறுத்திய அதிகாரிகள், மாற்று வினாத்தாளை விநியோகித்து அதன் பிறகு தோ்வெழுத மாணவா்களை அனுமதித்தனா். இதன் காரணமாக, அரை மணி நேரம் தாமதமாக பருவத் தோ்வு தொடங்கியது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் எம். வெங்கடேசன் கூறியதாவது:

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது என்ற தகவல் தவறானது. சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரியில் பிற்பகல் தோ்வுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய வினாத்தாளை, தவறுதலாக காலை தோ்வுக்கு விநியோகித்துவிட்டனா். இந்தத் தகவல் தெரிந்ததும், வினாத்தாள்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு, முறையான வினாத்தாள் விநியோகித்து அரை மணி நேரம் தாமதமாகத் தோ்வு தொடங்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT