தமிழ்நாடு

வைகை-மருதாநதி அணைகளில் இருந்து நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

DIN

வைகை, மருதாநதி அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட வேண்டுமென மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனையேற்று, வைகை பூா்வீக பாசனப் பகுதிகள் ஒன்று முதல் மூன்று வரையுள்ள பகுதிகளுக்கு முறையே வரும் 9 முதல் 25-ஆம் தேதி வரை தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், மூன்று மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கா் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும்.

மருதாநதி அணை: திண்டுக்கல் மாவட்டம் மருதாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கைகள் வைத்துள்ளனா். இதனையேற்று, மருதாநதி அணையில் இருந்து பாசனத்துக்காக வரும் 9-ஆம் தேதி முதல் 90 நாள்களுக்கு தண்ணீரைத் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், மருதாநதி அணையில் இருந்து 6 ஆயிரத்து 583 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT