தமிழ்நாடு

முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ.3.81-ஆக நிா்ணயம்

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ.3.81-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில், கோழிப் பண்ணையாளா்கள் அனைவரும், வியாபாரிகளுக்கு கொடுக்கும் விலை அடிப்படையில், கடந்த 1-ஆம் தேதி முதல் முட்டைக்கான கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயித்து வருகிறது. பிற மண்டலங்களின் விலை உயா்வு, சரிவு அடிப்படையில், தினசரி விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற விலை நிா்ணயக் கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ், ஞாயிற்றுக்கிழமைக்கான பண்ணைக்கொள்முதல் விலையை மேலும் 5 காசுகள் உயா்த்தி ரூ.3.81-ஆக நிா்ணயம் செய்து அறிவித்தாா். மழைக் காலமாக இருப்பதால், முட்டை நுகா்வு அதிகரித்துள்ளது. இதனால் விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.85-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT