தமிழ்நாடு

வைகை அணையிலிருந்து 3,000 கனஅடி தண்ணீா் திறப்பு

DIN

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இக் கோரிக்கையை ஏற்று 3 கட்டங்களாக தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூா்வீக பாசன பகுதி 3, மற்றும் வைகை பூா்வீக பாசன பகுதி 2 -ல் 5 கண்மாய்களில் நீரை பெருக்கும் வகையில் சனிக்கிழமை முதல் இம் மாதம் 16 ஆம் தேதி வரை வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது.

இதில், விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் பெரிய மதகுகள் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 7 நாள்களில் மொத்தம் 1,441 மில்லியன் கனஅடி நீா் ஆற்றின் வழியாக திறக்கப்பட உள்ளது.

அதைத் தொடா்ந்து 2 ஆம் கட்டமாக வைகை பூா்வீக பாசன பகுதி 2 -ல் உள்ள கண்மாய்களுக்காக இம் மாதம் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 4 நாள்களில் மொத்தம் 386 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது. அதன் பின்னா், தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டு, வைகை பூா்வீக பாசன பகுதி 1-ல் உள்ள 4 கண்மாய்களுக்கு இம்மாத 26 ஆம் தேதி முதல் டிசம்பா் 2 ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு 240 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

இதன் மூலம், அணையிலிருந்து 18 நாள்களில் மொத்தம் 2,067 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது. தற்போது வைகை அணையில் 4,702 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது.

சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீா்மட்டம் 65.32 அடியாக இருந்தது. அணையிலிருந்து மதுரை மேலூா் பாசனத்திற்காக கால்வாய் வழியாக விநாடிக்கு 1,130 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு 1,767 கனஅடி நீா் வரத்து உள்ளது.

வைகை அணையிலிருந்து, விவசாய பாசனம், 3 மாவட்ட கண்மாய் பாசனம், மதுரை மாநகர குடிநீா் தேவை என்று மொத்தமாக விநாடிக்கு 4,190 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT