தமிழ்நாடு

தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்?

DIN

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் உள்ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் அறிவுறுத்தலுக்கேற்ப, வருகிற டிசம்பர் மாதத்திற்குள்ளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசும், அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர். 

தமிழகத்தில் முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் தேர்தல் தொடர்பான வேலைகளில் மும்முரமாகியுள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு, மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டுத் தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் வந்த பின்னரே தேர்தல் தேதி உறுதியாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT