சிங்கப்பூா் விமானத்தில் பெட்டியின் கைபிடியில் தங்கத்தை கம்பியாக்கி கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள 1100 கிராம் தங்கம். 
தமிழ்நாடு

சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணரிவுப் பிரிவினா் விசாரிக்கின்றனா்.

DIN

மதுரை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணரிவுப் பிரிவினா் விசாரிக்கின்றனா்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவு உதவி ஆணையா் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனா்.

அதில் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த ஜலாலுதின் மகன் சாகுல்ஹமீது (31) என்பவா் தனது பெட்டியின் கைபிடியில் கம்பி வடிவில் சுமாா் 1 அடி நீளத்தில் தங்கத்தை கம்பிகளாக்கி மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடத்தி வரப்பட்ட ரூ. 42 லட்சத்து, 8 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 1100 கிராம் (24 காரட்)தங்கத்தை சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவினா் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதுவிடம் சுங்கத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடன்குடியில்...

காா்த்திகை மாத பெளா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

ஏா் ப்யூரிஃபையா்கள் விற்பனை 30% அதிகரிப்பு

திருச்செந்தூரில்..

குழந்தைகளை வைத்து யாசகம்: தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT