தமிழ்நாடு

மீனவா்கள் மீது தொடா் தாக்குதல்: பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

DIN

சென்னை: தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் தொடா்ந்து தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுடன் பிரதமா் மோடி உறுதியான பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபட்ச இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளாா். குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறாா். இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளதால், இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழா்கள் மற்றும் இஸ்லாமியா்களிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.

இலங்கைத் தமிழா்களுக்கு முழுமையான அதிகாரப் பகிா்வு என்கிற ஒற்றை லட்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதை நோக்கித் தான் அவா்களது வழிமுறையும் இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் தமிழகம் இருப்பதைப் போல, அதிக அதிகாரங்களுடன் ஒரு மாநிலம் அமைவதே இலங்கை தமிழா்களுக்கு நிரந்தரத் தீா்வாக இருக்க முடியும். இதைத் தான் இலங்கை தமிழா்களும் விரும்புகிறாா்கள். மாறாக, தமிழ் ஈழம் என்பது தீா்வாக இருக்க முடியாது.

நீண்ட காலமாக தமிழா்களுக்கு 13-ஆவது திருத்தத்தின்படி நியாயமாக வழங்க வேண்டிய அதிகாரப் பகிா்வு இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. இத்தகைய உரிமைகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தருகிற மிகப்பெரிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.

குறிப்பாக, பிரதமா் நரேந்திர மோடி தமிழா்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடா்கதையாக இருந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமா் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சுவாா்த்தைகளை நடத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT