பாமக நிறுவனர் ராமதாஸ் 
தமிழ்நாடு

பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தைப் பிடுங்கும் செயல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ராமதாஸ் விமர்சனம் 

யானைப்பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தைப் பிடுங்கும் செயல் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

DIN

சென்னை: யானைப்பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தைப் பிடுங்கும் செயல் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல். அதேநேரத்தில் தீண்டாமை குறித்த பொய்யான புகாரில் அப்பாவிகளை கைது செய்வது பெரும் பாவச்செயல், மாபெருங்குற்றம், மிருகத்தனமான நடவடிக்கை.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் மீது விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப்பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தைப் பிடுங்கும் செயல் ஆகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ற ஆயுதத்துடன் அப்பாவிகள் வேட்டையாடப்படுவதற்கே இது வழி வகுக்கும்!

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும், பொய் வழக்குகள் பதிவு செய்யப் படுவதும் ஜாதி அமைப்பின் தவறு அல்ல... மனிதத்தின் தோல்வி என்றால் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை அல்லவா? அவ்வாறு செய்யாதது உச்சநீதிமன்றத்தின் தோல்வி அல்லவா?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT