தமிழ்நாடு

நவராத்திரி விடுமுறையில் மகாபலிபுரம் செல்ல திட்டமிட்டிருந்தால்?

DIN

சென்னை: நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை விடுமுறையைக் கொண்டாட மகாபலிபுரத்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பவர்களின் கவனத்துக்கு..

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபரும் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சி அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா- சீனா இடையிலான நல்லுறவு மற்றும் வா்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாட இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஜீ ஜின்பிங் ஆகியோா் மாமல்லபுரம் வரவுள்ளனா். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வரும் அக்டோபா் 11-ஆம் தேதி முதல் அக்டோபா் 13-ஆம் தேதி வரை இருவரும் தங்கி இரு நாடுகளிடையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனா்.

இதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முன்னேற்பாடு பணிகளை முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், அக்டோபர் 11, 12, 13ம் தேதிகளில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என்பதால் இந்த நாட்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT