தமிழ்நாடு

ஆயுத பூஜை: சாலையில் பூசணிக்காய் உடைத்தால் வழக்கு

DIN

ஆயுத பூஜையையொட்டி, சாலையில் பூசணிக்காய் உடைத்தால் வழக்குப் பதியப்படும் என சென்னை பெருநகர காவல் துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறைசனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆயுத பூஜை காரணமாக பெரும்பாலான பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றறவற்றுக்கு பூஜை செய்து திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைப்பது வழக்கம்.

சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டுச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றறன. எனவே, பொதுமக்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பூசணிக்காய்களை உடைக்கக் கூடாது.

திருஷ்டி பூசணிக்காய்களை சாலைகளில் உடைத்து விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்படக் காரணமானவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT