தமிழ்நாடு

24 ஆயிரம் பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வாங்க மின்வாரியம் திட்டம்

DIN

ஊழியர்களுக்கு வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து, 24,629 சிம்கார்டுகள் வாங்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.
 தமிழக மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பிஎஸ்என்எல் சிம்கார்டு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 24,629 சிம்கார்டுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.28 லட்சத்து 48 ஆயிரத்து 98 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கும் சிம்கார்டுகள் பல்வேறு அலுவலகங்களுக்கும் பிரித்து வழங்கப்படும்.
 அதன்படி, மொத்தம் 24,629 சிம்கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிம்கார்டில் அளவில்லாமல் பேசும் வசதி, இந்தியா முழுவதும் இலவச ரோமிங் அழைப்பு, 5ஜிபி இண்டர்நெட், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் இடம் பெறுகின்றன.
 தற்போது இதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த சிம்கார்டுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT