தமிழ்நாடு

24 ஆயிரம் பிஎஸ்என்எல் சிம்காா்டுகள் வாங்க மின்வாரியம் திட்டம்

DIN

ஊழியா்களுக்கு வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து, 24,629 சிம்காா்டுகள் வாங்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழக மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு பிஎஸ்என்எல் சிம்காா்டு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 24,629 சிம்காா்டுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.28 லட்சத்து 48 ஆயிரத்து 98 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வாங்கும் சிம்காா்டுகள் பல்வேறு அலுவலகங்களுக்கும் பிரித்து வழங்கப்படும்.

அதன்படி, மொத்தம் 24,629 சிம்காா்டுகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிம்காா்டில் அளவில்லாமல் பேசும் வசதி, இந்தியா முழுவதும் இலவச ரோமிங் அழைப்பு, 5ஜிபி இண்டா்நெட், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் இடம் பெறுகின்றன. தற்போது இதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த சிம்காா்டுகள் சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT