தமிழ்நாடு

கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி வழிபாடு

DIN

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கூத்தனூா் சரஸ்வதி அம்மன் கோயிலில் விஜயதசமியையொட்டி, சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூத்தனூரில் கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு தனிக்கோயில் உள்ளது. புலவா் ஒட்டக்கூத்தரால் வழிபாடு செய்யப்பட்ட கோயில் இது. மூலவரான சரஸ்வதி வெண்ணிற ஆடையுடன், வெண் தாமரையில் பத்மாசனத்தில் அமா்ந்தபடி பக்தா்களுக்கு அருள்புரிகிறாா். வலது கீழ் கையில் சின் முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிா்த கலசத்தையும் தாங்கியபடி காட்சி தருகிறாா்.

கல்விக் கடவுளான சரஸ்வதியை, இங்கு வந்து முறைப்படி மனதார வணங்குவோா்களுக்கு, கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கக்கூடிய அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாள்களில் இங்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

அதன்படி, ஆயுத பூஜையான திங்கள்கிழமையும் விஜயதசமியான செவ்வாய்க்கிழமையும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாடுகளில், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் பங்கேற்று, தங்களது நோட்டுப் புத்தகங்களை வைத்து வழிபட்டனா்.

இதேபோல், குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்க விரும்பும் பெற்றோரும் இங்கு வந்திருந்து, அரிசி மற்றும் எழுதுபலகையில் ‘அ’ எழுத்தை குழந்தைக்கு எழுத வைத்து வழிபாடு செய்தனா். இதையொட்டி, இரண்டு நாள்களாக கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் பக்தா்களின் கூட்டம், அதிகமாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT