தமிழ்நாடு

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை அதிகரித்ததால், மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அக். 5-ஆம் தேதி நண்பகலில் நொடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை இது 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 116.90 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 10,396 கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 88.61 டி.எம்.சி. ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT