தமிழ்நாடு

கோவளம் பீச்சில் துப்புரவு பணி செய்த மோடி: கார்த்தி சிதம்பரம் பகிர்ந்திருக்கும் பகீர் ஃபோட்டோ

DIN


கோவளம்: கடந்த வாரம் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 

அந்த புகைப்படமும், விடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது தொடர்பான விடியோவை பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்ததை ஏராளமான ஊடகங்கள் கேமராவில் பதிவு செய்தது போன்ற ஒரு புகைப்படத்தை கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

இது உண்மையான புகைப்படமா? அல்லது வேறு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா? என்பது குறித்து எந்த உறுதியும் செய்யப்படவில்லை. ஆனால் இது குறித்து மீம்ஸ்கள் ஏற்கனவே உருவாகி அவையும் வைரலாகி வருகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் மாமல்லபுரம் வந்தார். இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான முதற்கட்ட சந்திப்பு மாமல்லபுரத்தில் நிறைவடைந்த நிலையில், கோவளத்தில் தங்கியிருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், பிரதமர் மோடி சனிக்கிழமை காலை கடற்கரையோரம் நடை பயணம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, கடற்கரையில் நிறைய குப்பைகள் இருந்ததால், அவர் அதைத் தனது கைகளால் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி இந்தப் பணியை சுமார் 30 நிமிடங்கள் மேற்கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்த குப்பைகளுள் பெரும்பாலானவை பிளாஸ்டிக் குப்பைகளாகவே இருந்தன.

இதையடுத்து, தான் அகற்றிய குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தோளில் சுமந்தபடி, ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்படைத்தார். கையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமலே பிரதமர் மோடி இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பான 3 நிமிடங்கள் கொண்ட விடியோ காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதிலிருந்தே, நமது இடத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடியோவும், புகைப்படமும் அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT