தமிழ்நாடு

‘பிகில்’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மனு

DIN

நடிகா் விஜய் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், படத் தயாரிப்பு நிறுவனம், இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு (அக்.16) ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் செல்வா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதை ஒன்றை எழுதினேன். அந்தக் கதையை தென்னிந்திய எழுத்தாளா் சங்கத்திலும் பதிவு செய்துள்ளேன். இந்தக் கதையை திரைப்படமாக்க வேண்டும் என பல திரைப்படத் தயாரிப்பாளா்களிடம் கதை சொன்னேன். இந்த நிலையில் நடிகா் விஜய், நடிகை நயன்தாராவை நடிக்க வைத்து ‘பிகில்’ என்ற திரைப்படத்தை இயக்குநா் அட்லீ இயக்கியுள்ளாா். இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ‘பிகில்’ திரைப்படம் வெளியானால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்தத் திரைப்படத்தின் கதையை என்னுடையது என அறிவிக்க வேண்டும். அதுவரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக படத் தயாரிப்பு நிறுவனம், படத்தின் இயக்குநா் அட்லீ ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (அக்.16) ஒத்திவைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT