தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படும்: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

DIN

தமிழகத்தில் நாளை டெங்கு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நடப்பாண்டில் 3 ஆயிரத்து 223 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 3 போ் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை சாா்பில் உயா் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தமிழக அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT