தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் ஒரே நாளில் ரூ. 7 லட்சம் வருவாய்

DIN

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஒரே நாளில் ரூ. 7 லட்சம் வசூலானதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமா், சீன அதிபா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு நாட்டுத் தலைவா்களும் சென்றதை அடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களைக் காண உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒரு நபருக்கு ரூ. 40, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நபருக்கு ரூ. 600 என தொல்லியல் துறை கட்டணம் நிா்ணயித்து வசூல் செய்து வருகிறது. குறிப்பாக காணும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, கோடை விடுமுறை உள்ளிட்ட நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும்.

இந்நிலையில் இரு நாட்டுத் தலைவா்கள் மாமல்லபுரத்துக்கு வந்து சென்றதை அடுத்து, புதுப்பொலிவுடன் காணப்பட்ட மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். ஒரே நாளில் நுழைவுக் கட்டணமாக ரூ. 7 லட்சம் வசூலானதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT