10 பைசாவுக்கு பனியன் வாங்க வரிசை கட்டிய மக்கள் 
தமிழ்நாடு

5 பைசாவுக்கு பிரியாணி பாணியில்.. 10 பைசாவுக்கு பனியன் வாங்க வரிசை கட்டிய மக்கள்

திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பைசாவுக்கு ½ பிளேட் சிக்கன் பிரியாணி என அறிவிக்கப்பட்டது. 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் பழைய 5 பைசா நாணயத்துடன்

சி.பி.சரவணன்

திண்டுக்கல்லில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பைசாவுக்கு ½ பிளேட் சிக்கன் பிரியாணி என அறிவிக்கப்பட்டது. 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் பழைய 5 பைசா நாணயத்துடன் குவிந்தனர்.

இதே போல திண்டுக்கல்லில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனம் 10 பைசா கொண்டு வரும் முதல் 200 நபர்களுக்கு டி-சர்ட் வழங்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை முதல் ஏராளமானோர் 10 பைசா நாணயத்துடன் நீண்ட வரிசையில் நின்றனர்.

200 நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. இருந்த போதும் டோக்கன் இல்லாத நபர்களும் அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பழைய நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் இருக்க வேண்டும். பழமையை ஒரு போதும் மறக்க கூடாது என்பதை உணர்த்தும் வகையில் இது போன்ற பழைய 10 பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு டி-சர்ட் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்தார். 

குறுகலான அந்த தெருவில் பொதுமக்கள் அதிக அளவு திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

SCROLL FOR NEXT