தமிழ்நாடு

கிணற்றில் விழுந்து மரணம்.. சுஜித் குடும்பத்தை தொடரும் துயரும்

ENS


திருச்சி: குழந்தை சுஜித்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தமிழகத்தை விட்டு அகலாத நிலையில், சுஜித் குடும்பத்தில் கிணற்றில் விழுந்து மரணிக்கும் சம்பவம் இது இரண்டாவது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பிரிட்டோ குடும்பத்தில் கிணற்றில் விழுந்து ஏற்கனவே உறவினர் மரணித்த சில மாதங்களிலேயே சுஜித்தின் மரணமும் நிகழ்ந்துள்ளதுதான் வேதனை.

சுஜித்தின் மாமா ஜான் பீட்டர். ராணுவத்தில் பணியாற்றி வந்த ஜான், ஆண்டு விடுப்பில் கடந்த ஜூன் மாதம் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்திருந்த போது, கிணற்றில் விழுந்த கோழியைக் காப்பாற்ற முயற்சித்து, கிணற்றில் விழுந்து பலியானார்.

ராணுவத்தில் பணியாற்றியதால் எளிதாக எதிலும் ஏற இறங்கும் துணிச்சலுடன், வெளியில் இருந்து எந்த உதவியும் இல்லாமல், ஒரே ஒரு கயிறை மட்டும் பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்கியிருக்கிறார் ஜான். கிணற்றில் இருந்த கோழியை மீட்டு மேலே கொண்டு வந்த போது துரதிருஷ்டவசமாக கயிறு அறுந்து, தண்ணீர் இன்றி வறண்டு இருந்த கிணற்றில் இருந்த கல் மீது ஜான் விழுந்தார். தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார்.

அதன்பிறகு, அந்த கிணற்றை வேலி போட்டு மூடிய குடும்பத்தினர், யாரையும் அந்த கிணற்றுப் பக்கம் போக விடாமல் தடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT