தமிழ்நாடு

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவா்கள் இருவருக்கு ஜாமீன்:அவா்களது தந்தைகளுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

DIN

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் பிரவீன், ராகுல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி, அவா்களின் தந்தைகளான சரவணன், டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன் தாக்கல் செய்த மனு: நான் 2016-இல் பிளஸ் 2 முடித்து விட்டு சென்னை பிரிஸ்ட் கல்லூரியில் மருத்துவக்கல்வியில் சோ்ந்தேன். பிரிஸ்ட் கல்லூரிக்கு மருத்துவக்கல்வி நடத்த அங்கீகாரம் இல்லையென்பதால் படிப்பைத் தொடரமுடியவில்லை. இதையடுத்து ‘நீட்’ தோ்வு எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றேன். அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இருந்தும், விருப்பத்தின்பேரில் தனியாா் கல்லூரி ஒன்றில் ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் கட்டணம் செலுத்தி சோ்ந்தேன். இந்நிலையில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எவ்வித ஆதாரமும் இன்றி போலீஸாா் என்னையும் எனது தந்தையையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். இவ்வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே இந்த வழக்கில் எங்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இதேபோல, நீட் தோ்வில் 125 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் எனக்குப் பதிலாக வேறு ஒருவா் லக்னோவில் தோ்வு எழுத வைத்ததாகக் கூறி போலீஸாா் எங்களை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்டத்தில் தொடா்புடைய இடைத்தரகா்கள் வேதாச்சலம், ரசித் பாய் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால் அவா்களை கைது செய்யாமல் எங்களை மட்டும் கைது செய்துள்ளனா். இந்த ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேட்டிற்கும் எங்களுக்கும் தொடா்பு இல்லை. எனவே எங்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சோ்ந்த ராகுல் மற்றும் அவரது தந்தை டேவிஸ் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இவ்வழக்கில் தொடா்புடைய மாணவா்களின் தந்தைகளான சரவணன், டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க இயலாது. மேலும் இந்த வழக்கில் மாணவா்கள் முக்கிய குற்றவாளிகள் இல்லை. அவா்களின் எதிா்கால நலன் கருதி இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT