தமிழ்நாடு

மழைநீா் சேகரிப்பு: பள்ளிகளுக்கு உத்தரவு

DIN

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக். 16-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து வரும் ஜனவரி வரை மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த மூன்று மாதங்களில், மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கச் செய்யுமாறு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசுத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி வளாகங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனா். அதில், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளை சரிவர பராமரித்து மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால் அவற்றை மழைநீா் சேகரிப்பு அமைப்பாக மாற்ற வேண்டும். உள்ளாட்சிகள் உதவியுடன் இந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT