முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் அமைத்தால் அபராதம், சிறை: மாநகராட்சி அதிரடி    

சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:02 AM
சென்னை மாநகராட்சி அலுவலகம்
பகிர்:

சென்னை: சென்னையில் இனி மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் ரூ.25,000 அபராதமும் , 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இதனை மீறும் தனியார் அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது கடுமையான எடுக்கப்படும்.

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மரங்களில் எவ்வித சேதாரமின்றி பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →