தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் வெப்பச் சலன மழை விருந்து ஆரம்பம்!

DIN


தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யாத பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு வெப்பச் சலன மழை விருந்து ஆரம்பமாகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை பொழியாத பகுதிகளில் இன்று முதல் 2 வாரங்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்.

ஆனால் இதன் காரணமாக சென்னையில் இருக்கும் தண்ணீர் பிரச்னை தீராது. ஆனால் தென்மேற்குப் பருவ மழைக் காலம் முடிவடையும் முன்பு, நிலத்தடி நீர் மட்டம் முன்பை விட சற்று சீரடையும். 

சென்னை இன்று இரவு மழை பெய்வதற்கான சிறப்பான இடமாக தேர்வாகியுள்ளது. ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இன்று மழை பெய்யாமல் போனால் நிச்சயம் நாளை மழை பெய்ய பிரகாசமான வாய்ப்பு இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமோகமாக இருக்கிறது. அதே சமயம், கேரளா, வால்பாறை, நீலகிரி மாவட்டங்களில் மழை படிப்படியாகக் குறையும்.

எனவே, உங்கள் வீடு மற்றும் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மையத்தை பராமரித்து வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT