தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய மழை: தமிழகத்தின் 20 மாவட்டங்களுக்கு இன்றும் மழை வாய்ப்பு

DIN

வெப்பச்சலனம், காரைக்கால் அருகே கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கம் ஆகியவை காரணமாக, தமிழகத்தின் 20 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (செப்.11) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய  வாய்ப்பு உள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT