தமிழ்நாடு

ராமேசுவரம் கடலில் பாசிகளின் அடர்த்தியால் திடீர் நிற மாற்றம்

DIN


ராமேசுவரம் குந்துகால் பகுதியில் பாசிகளின் அடர்த்தியால் கடலின் நிறம் மாறியதாகவும், இதனால்  மீன்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் கூறினார்.
 ராமேசுவரம் குந்துகால் பகுதியில் புதன்கிழமை திடீரென கடலின் நிறம் பச்சை நிறத்துக்கு மாறியதாக தகவல்கள் வெளியாகின. கடலில் நிற மாற்றம் ஏற்படுவது ஏன் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புவதுடன், இதனால், மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்றும் கேள்வி எழுந்தது. 
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன்  கூறியது: கடலில் மிதக்கும் பாசிகள் உள்ளன. அவற்றின் மூலமே மீன்களுக்கான பிராண வாயு கிடைக்கிறது. அந்த பாசிகள் மற்றும் கடலின் அடியில் இருக்கும் வேதிப்பொருள்களே மீன்களின் உணவாகும்.  கடலில் இரு வேறு தண்ணீரின் வெப்ப நிலை சேரும்போது ஏற்படும் மாற்றத்தால் பாசிகள் அடர்த்தியாகச் சேர்ந்து நிறம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. கடல் நீரோட்டம் உள்ள இடத்தில் பாசிகள் அடர்ந்திருந்தால் மீன்களுக்கு உணவு அதிகரிக்குமே தவிர ஆபத்தில்லை. ஆனால், நீரோட்டம் குறைந்த இடத்தில் பாசிகள் சேர்வதால் அங்கு வெப்பம், பிராண வாயு மாற்றத்தால் மீன்களுக்கு சுவாசிக்க பிரச்னை ஏற்படலாம். 
 ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் தற்போது கடலியல் சூழல் நன்றாக உள்ளது. மீன் வளமும் கடந்த ஆண்டைவிட சில பகுதிகளில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே கடல் நிற மாற்றத்தால் பாதிப்பில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT