முகப்பு
தமிழ்நாடு

ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து சிறைக்குத் திரும்புகிறார் நளினி 

தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார் 

Updated On : 15 செப்டம்பர் 2019, 6:52 pm IST
நளினி முருகன்
பகிர்:

வேலூர்: தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற ஏழு பேர்களில் ஒருவரான முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவியான நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஆரித்ராவின் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கேட்டுப் பெற்ற நளினி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். தனக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒருமாதம் நீடிக்குமாறு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு நீட்டிப்பு செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஐமபத்தொரு நாட்கள் பரோல் முடிந்து நளினி ஞாயிறு மாலை சிறைக்குத் திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments