தமிழ்நாடு

திராவிடப் போர்வாள்: ஸ்டாலின் உரைக்கு மேடையிலேயே கண்கலங்கிய வைகோ

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

DIN

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லையா சத்யா உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.

மதிமுக நடத்தும் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு அவர் உரையாற்றியதாவது,

மதிமுக மாநாட்டில் இதுதான் எனது முதல் உரை. திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி இருந்தபோது, கோபாலபுரம் வந்த வைகோ, திமுக-வுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாக வாக்குறுதி அளித்தார். 

திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று பேசினார். அப்போது மேடையில் இருந்த வைகோ உணர்வுப்பூர்வமாக கண்கலங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருக்குறளை வீடு, வீடாகக் கொண்டு செல்ல வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

திருவாரூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்திய 4,506 போ் கைது

எஸ்.வேலங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்

இந்திரா டிரெய்லர்!

SCROLL FOR NEXT