தமிழ்நாடு

அண்ணா சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மரியாதை

DIN

அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் உள்பட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

அதன்படி, அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை 10 மணியளவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT