தமிழ்நாடு

ஆசிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ வேண்டும்: புவிவெப்பமயமாதல் குறித்து ராமதாஸ் வேண்டுகோள் 

DIN

சென்னை: புவிவெப்பமயத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆசிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

புவிவெப்பமயமாதலை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையை மாற்ற வேண்டும்; இதை உலக அளவில் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா புவிவெப்பமயமாதல் சிறப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது எண்ணத்தை செயல்படுத்த காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்!

புவிவெப்பமயத்தைக் கட்டுப்படுத்த 2022-ல் எட்டப்பட வேண்டிய மரபுசாரா மின்னுற்பத்தி இலக்கு 175 ஜிகாவாட்டிலிருந்து 450 ஜிகாவாட்டாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மோடியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. புவிவெப்பமயத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆசிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ வேண்டும்!

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் உலகத் தலைவர்கள் தோற்றுவிட்டதாக ஐ.நா மாநாட்டில் 16 வயது ஸ்வீடன் மாணவி கிரேட்டா துன்பர்க் குற்றஞ்சாட்டியிருப்பதும், அவர் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்படுவதும் மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. இதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணர வேண்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT