சென்னை: சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணிகண்டன் செவ்வாய் இரவு போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவன் ரவுடி மணிகண்டன். இவன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் செவ்வாயன்று விழுப்புரம் போலீசார் வழக்கு ஒன்றிற்காக கொரட்டூரில் பதுங்கியிருந்த ரவுடி மணிகண்டனை பிடிக்க முயன்ற போது, போலீசாருடன் ஏற்பட்ட சண்டையில் மணிகண்டன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.