தமிழக அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் 
தமிழ்நாடு

பகவத் கீதையை பாடமாக அறிவித்திருந்தால் வரவேற்கிறேன்: 'பலே' பாண்டியராஜன் 

பகவத் கீதையை பாடமாக அறிவித்திருந்தால் வரவேற்கிறேன் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: பகவத் கீதையை பாடமாக அறிவித்திருந்தால் வரவேற்கிறேன் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT,CEG,ACT மற்றும் SAP வளாக முதலாமாண்டு மாணவர்களுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவப்பாடப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு  எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு திமுக,மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கணடனம் தெரிவித்தன.

இந்நிலையில் அறிவிப்பிற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து பகவத் கீதையை  விருப்பப் பாடமாக மாற்றியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம்  புதன் மாலை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பகவத் கீதையை பாடமாக அறிவித்திருந்தால் வரவேற்கிறேன் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

அண்ணா பல்கலை.யில் பகவத் கீதை பாடமாக அறிவித்தது எனக்கு தெரியாது; அப்படி அறிவித்திருந்தால் வரவேற்கிறேன்

பகவத் கீதையை சமய நூலாக பார்க்கவில்லை; பண்பாட்டு நூலாகவே பார்க்கிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT