தமிழ்நாடு

644 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம்

DIN

சென்னையில் நடைபெற்ற விழாவில் 644 காவலர்களுக்கு முதல்வர் பதக்கத்தை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வழங்கினார்.

இதுகுறித்த விவரம்: தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல், சிறப்பாகப் பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் அந்தந்த மாநகர காவல்துறை, மாவட்ட காவல்துறைகளில் நடைபெறும் விழாக்களில் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, குற்றப்பிரிவில் பணியாற்றும் காவலர்களில் 230 காவலர்களும், போக்குவரத்துப் பிரிவில் 289 காவலர்களும், ஆயுதப்படையில் 27 காவலர்களும், மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு, குற்ற ஆவணக் காப்பகம், நவீன கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றில் 98 காவலர்களும் என மொத்தம் 644 காவலர்களுக்கு முதல்வர் காவல்  பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு இந்தப் பதக்கம் வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கத்தை அணிவித்து, வாழ்த்திப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT