தமிழ்நாடு

ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்க மதுரை மாணவிக்கு அழைப்பு

DIN

மதுரை மாவட்டம் இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனித உரிமைக் கல்வி பயின்ற மாணவி, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் உரையாற்ற உள்ளார்.

இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்தவர் பிரேமலதா (21) . இவர், இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடக் கல்வியோடு மனித உரிமைக் கல்வியையும் படித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைக் கழகம் மூலம் மனித உரிமைக் கல்வி செயல்படுத்தப்படும் விதம், அதனால் ஏற்படும் தாக்கம் குறித்த "எ பாத் டூ டிக்னிட்டி' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது. அந்த குறும்படத்தில் வரும் ஒரு காட்சியில், கடந்த 2010-11-இல் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பிரேமலதா, மனித உரிமைக் கல்வியின் முக்கியத்துவம், சாதிய பாகுபாடு மற்றும் பாலினப் பாகுபாடு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.       தற்போது, இளங்கலைப் பட்டம் முடித்து, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ள பிரேமலதாவுக்கு, ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு வந்துள்ளது.

இது குறித்து பிரேமலதா சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: எனது பெற்றோர் தமிழ்செல்வன், வெண்ணிலா கூலி தொழில் செய்து, என்னைப் படிக்க வைத்தனர். எங்கள் பள்ளியில் நான் கற்ற மனித உரிமைக் கல்வி, கேள்விக் கேட்கும் உரிமையை அறிய வைத்தது. இதன்மூலம் பலருக்கும் உதவ முடியும் என்ற தன்னம்பிக்கையையும் கொடுத்தது. அப்போது நான் பயின்ற மனித உரிமைக் கல்வியால்தான், மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற உயர் ஆணையர் அலுவலகத்திலிருந்து அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு வந்துள்ளது. அதில், "எ பாத் டூ டிக்னிட்டி' குறும்படம் திரையிடப்படும்.

மேலும், மனித உரிமைக் கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட உள்ளது. இதன்பின்னர், ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் சர்வதேச சமூக மன்றக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.  தற்போது, ஜெனீவா கூட்டத்தில் பேசுவதற்காக தயாராகி வருகிறேன். அதில், முக்கியமாக அனைத்துப் பள்ளிகளும் மனித உரிமைக் கல்வியைப் பாடமாக வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT