தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தோர் சிக்குவது எப்போது?

மக்களவைத் தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்றவர்கள் சிக்கப் போவது எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்றவர்கள் சிக்கப் போவது எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு என்பது செய்தி. இந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து கொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ?

தமிழ்த்தாள் நீக்கத்துக்கு வரவேற்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப் -2 தேர்வில் பொதுத்தமிழ்த் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு சாதகமானதாக அமையும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குப் பாராட்டுகள் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT