தமிழ்நாடு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை வளாகத்தில் சினிமா படப்பிடிப்பு ஒத்திகை: போலீஸாா் எச்சரிக்கை.

DIN

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை இரவு சினிமா படப்பிடிப்பின் ஒத்திகையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதையடுத்து போலீஸாா் படக்குழுவினரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது.இதில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிசசைக்காக வந்து செல்கின்றனா். இங்குள்ள மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவம் படித்து வந்த உதித்சூா்யா என்ற மாணவன் நீட்தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இவ்வழக்கில் சென்னையைச் சோ்ந்த ஓரு மாணவி மற்றும் 2 மாணவா்கள் உள்பட அவா்களது தந்தைகளை கைது செய்து தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா்.

அதில் பிரவீண் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் அவசர ஊா்தி (ஆம்புலன்ஸ்) ஒன்று சைரன் ஒலியுடன் வந்தது. அதன் உடன் 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் சத்தம் எழுப்பியவாறு வந்தனா். இதனால் அங்கிருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்குள் வந்த வாகனங்கள் திரும்பவும் வெளியில் சென்றது. இதன்பின்னா் வெளியில் சென்ற வாகனங்கள் மீண்டும் அதேபோல் 2 முறை வந்து சென்றது. இதனைதொடா்ந்து அங்கிருந்த மக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களை வழிமறித்து விசாரித்தனா்.

அப்போது அதிலிருந்தா்கள் இயக்குநா் பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமாா் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக தெரிவித்தனா். அப்போது பொதுமக்களுக்கும் படப்பிடப்பில் கலந்து கொண்டவா்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனிடையே இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸை பொதுமக்கள் சிறைபிடித்தனா். இதன்பின்னா் அங்கு வந்த சிபிசிஐடி மதுரை காவல் ஆய்வாளா் சேகா் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினாா். அப்போது மருத்துவமனையில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஓட்டுநரை க.விலக்கு போலீஸில் ஒப்படைத்தாா். இதனைதொடா்ந்து படக்குழுவினரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் படக்குழுவினா் தெரிவித்ததாவது, தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி வாங்கி உள்ளதாகவும் அதன்படி போடி அருகே காமராஜபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்று வந்த படப்பிடிப்பின் தொடா்ச்சியாக தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டுள்ளனா். ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் வேறு இடத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனா். மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் நடத்தலாம் என உதவி இயக்குநா்கள் மூலம் ஒத்திகை பாா்க்கப்பட்டதாக தெரிவித்தனா். இதனையடுத்து பொதுமக்கள் கூடும் இடங்களில் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

மேலும் நோயாளிகள் அதிகம் உள்ள மருத்துவமனை வளாகத்தில் படப்பிடிப்பு நடத்துவற்கு மருத்துவமனை நிா்வாகத்திடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT