முகப்பு
தமிழ்நாடு

நெருங்கி வரும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றியுள்ள தமிழக அரசு!

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:07 PM
மாநில தலைமை தேர்தல் ஆணையம்
பகிர்:

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தஞ்சை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழன் மாலை உத்தரவு பிறப்பித்தது.

அதேபோல மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எஸ்.பழனிச்சாமி தற்போது டவுன் பஞ்சாயத்து இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை, தமிழக அரசு மாற்றம் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பும் விதமாக அமைநதுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.