தமிழ்நாடு

தமிழகத்தில் தடையை மீறி வெளியே சுற்றிய 1,25,793 பேர் கைதாகி விடுவிப்பு

DIN

தடையை மீறி வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793 பேர் கைதாகி ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடந்த 24ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. 

அத்தியாவசியத் தேவைகள் தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் தடையை மீறி வெளியே சுற்றியதாக 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793 பேர் கைதாகி ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 85,850 வாகனகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT